பச்சை பயறு சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முளை கட்டிய பச்சைப் பயறு - 200 கிராம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
8. புதினா இலை - சிறிதளவு
செய்முறை:
1. முளைகட்டிய பச்சைப்பயறை ஆவியில் வேக வைத்து, அதை மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து அதில் வெங்காயம், தக்காளி விழுது போட்டு வதக்கி, அதனுடன் இஞ்சிப் பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.
4. அரைத்த பாசிப்பயறை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
5. பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், புதினா இலை சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.