நாட்டுக் கோழி சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. எலும்புடனான நாட்டுக் கோழி கறி- 1/4 கிலோ
2. சிறிய வெங்காயம் -8 எண்ணம்
3. மிளகு- 2 தேக்கரண்டி
4. சீரகம் -1 தேக்கரண்டி
5. இஞ்சி -சிறு துண்டு
6. பூண்டு- 6 பற்கள்
7. நாட்டுத் தக்காளி -1 எண்ணம்
8. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
9. கல் உப்பு – தேவையான அளவு
10. மல்லித்தழை – சிறிது.
செய்முறை:
1. கோழிக்கறியைச் சுத்தமாகக் கழுவி வைக்கவும்.
2. சிறிய வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
3. இஞ்சி, பூண்டு நசுக்கி வைக்கவும்.
4. மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.
5. ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கோழிக்கறி, வெங்காயம், இஞ்சிப் பூண்டு விழுது, தக்காளி, பொடித்த மிளகு, சீரகம், மஞ்சள் தூள், கல் உப்பைப் போட்டு கிளறவும்.
6. மிதமான நெருப்பில் கோழிக்கறியை நன்றாக வேகவிடுங்கள்.
7. கோழிகறியில் இருக்கும் கொழுப்பின் மணத்துடன் மிளகின் மணமும் சேர்ந்து புதுவித மணம் உண்டாகும்.
8. அந்த சமயம் மல்லித்தழையைத் தூவிப் பாத்திரத்தை இறக்குங்கள்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.