முடக்கத்தான் கீரை சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முடக்கத்தான் கீரை - 100 கிராம்
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. தக்காளி - 100 கிராம்
5. பூண்டு - 5 பற்கள்
6. கருவேப்பிலை - சிறிது
7. மல்லித்தழை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முடக்கத்தான் கீரையை நீரில் அலசிச் சுத்தம் செய்யவும்.
2. முடக்கத்தான் கீரையை அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி வைக்கவும்.
3. நறுக்கிய முடக்கத்தான் கீரையைத் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
4. சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடி செய்து வறுத்து எடுத்து வைக்கவும்.
5. வேக வைத்த முடக்கத்தான் கீரையுடன் தக்காளியை நறுக்கிக் கரைத்துச் சேர்க்கவும்.
6. அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
7. நன்கு கொதித்த பின்பு அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு
தினமும் அதிகாலையில் இந்த முடக்கத்தான் கீரை சூப்பை அருந்தி வந்தால் மூட்டு வலி, கால் வலி போன்றவை நீங்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.