காரட் சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காரட் - 4 எண்ணம்
2. வெங்காயம் -1எண்ணம்
3. பூண்டு 3 - பல்
4. வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப் (செய்முறை கீழேயுள்ளது)
5. வெண்ணைய் - 1 மேசைக்கரண்டி
6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
7. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
8. சோளமாவு - 1 தேக்கரண்டி
9. தேங்காய்ப்பால் - 1/2 கப்
10. உப்பு - தேவையான அளவு
வெஜிடபிள் ஸ்டாக் செய்முறைக் குறிப்பு
தேவையான பொருட்கள்
1. வெங்காயம் - 1 எண்ணம்
2. தக்காளி - 2 எண்ணம்
3. முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)
4. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
5. பூண்டு - 4 பல்
6. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
7. மிளகு - 1தேக்கரண்டி
8. கிராம்பு - 2 எண்ணம்
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீரில் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
3. அதனுடன் பூண்டு, பிரிஞ்சி இலை, மிளகு, கிராம்பு, சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
காரட் சூப் செய்முறை:
1. காரட், வெங்காயம் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் வெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய காரட், வெங்காயம் இரண்டையும் போட்டு வதக்கவும்.
3. பின்னர் நறுக்கிய பூண்டு, இஞ்சி, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. வெஜிடபிள் ஸ்டாக் 2 கப்பை உப்புடன் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
5. சூப் தண்ணீராக இருந்தால் சிறிது சோளமாவைத் தண்ணீரில் கரைத்துக் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
6. கடைசியில் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.