முட்டைக்கோஸ் சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. முட்டைக்கோஸ் - 250 கிராம்
2. கேரட் - 1எண்ணம்
3. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
4. பால் - 100 மி.லி
5. எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
6. மல்லித்தழை - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
1. முட்டைக்கோஸ், கேரட் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட் ஆகியவற்றை வதக்கவும்.
3. வதக்கியவற்றுடன் ஒரு லிட்டர் அளவிலான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
4. முட்டைக்கோஸ், கேரச் ஆகியவை நன்கு வெந்ததும் தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
5. அத்துடன் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துச் சில நிமிடம் கொதிக்க வைக்கவும்.
6. பின்பு அதில் பால், மல்லித்தழை சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.