ஆட்டுக்கறி சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி (எலும்புடன்) -50 கிராம்
2. வெங்காயம் -1 எண்ணம்
3. தக்காளி -1எண்ணம்
4. இஞ்சி - சிறிய துண்டு
5. பூண்டு -3 பல்
6. மல்லித்தழை - சிறிதளவு
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
8. உப்பு - 1 தேக்கரண்டி
9. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
10. மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் ,தக்காளி, இஞ்சி, பூண்டு, கோழிக்கறித்துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும் .
2. நன்றாகக் கொதித்த பின்பு இறக்கி, தேவையான அளவு சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.