முருங்கைக்காய் சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் - 3 எண்ணம்
2. பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி - 2 எண்ணம்
5. பூண்டு - 2 பல்
6. இஞ்சி - சிறிது
7. மிளகு - 1 தேக்கரண்டி
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. பால் - 1/2 கப்
10. சோள மாவு - 1 கப்
10. சர்க்கரை - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. முருங்கைக்காயை வேகவைத்து உள்ளிருக்கும் விதைகளைத் தனியே எடுத்து வைக்கவும்.
2. மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்துப் பொடித்து வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. இதனுடன் பாசிப்பருப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
5. முருங்கைக்காய் விதைகள், வேக வைத்த பாசிப்பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. இதனுடன் பாலில் சோள மாவைக் கரைத்துச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
7. அத்துடன் தேவையான உப்பும், சிறிது சர்க்கரையும் சேர்த்து இறக்கவும்.
8. சூப்பை அருந்துவதற்கு முன்பு மிளகு, சீரகப் பொடியைச் சேர்த்துக் கொள்ளவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.