ஆட்டு எலும்பு சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு எலும்புத் துண்டுகள் – 1/4 கிலோ
2. மிளகு – 1 தேக்கரண்டி
3. சீரகம் – 1 தேக்கரண்டி
4. சோம்பு – 1 தேக்கரண்டி
5. வெங்காயம் – 2 எண்ணம்
6. வெண்ணெய் – 1 தேக்கரண்டி
7. இஞ்சிப்பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் ஆட்டு எலும்புத் துண்டுகளை நன்கு கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. சுத்தம் செய்த ஆட்டு எலும்புத் துண்டுகளுடன் இஞ்சிப்பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகு, சீரகத்தைப் பொடி செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
3. வேக வைக்கப்பட்ட ஆட்டு எலும்புத் துண்டுகளின் சாற்றைத் தனியாகப் பிரித்தெடுக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பைப் போடவும். சோம்பு சிவந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி அதில் எலும்புச் சாற்றை ஊற்றவும்.
5. எலும்புச் சாறு நன்கு கொதித்து மணமாக வரும்போது மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.