மக்ரோனி சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மக்ரோனி - 1/2 கப்
2. பச்சைப் பட்டாணி - 1/4 கப்
3. வெள்ளைப் பூசணி - 1/4 கிலோ
4. உருளைக்கிழங்கு - 1எண்ணம்
5. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
6. பால் - 1/2 கப்
7. வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
8. மிளகுத்தூள் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. மக்ரோனியைத் தண்ணீர் சேர்த்து வேக வைத்துத் தண்ணீர் வடித்து வைக்கவும்.
2. பட்டாணியையும் வேகவைத்து எடுத்து வைக்கவும்.
3. உருளைக்கிழங்கு, பூசணிக்காய், வெங்காயம் ஆகியவற்றைத் தோல் நீக்கித் துண்டுகளாக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை உருக்கி, பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
5. அதில் 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
6. நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அக்காய்களை அரைத்துக் கொள்ளவும்.
7. அரைத்ததை மீண்டும் முதலில் வேகவைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
8. அத்துடன் பால் சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
9. இறக்கிய சூப்பில், வேகவைத்த பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத்தூள் தூவிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.