காளான் சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 100 கிராம்
2. வெண்ணெய் - 100 கிராம்
3. சோளமாவு - 100 கிராம்
4. பால் - 1 லிட்டர்.
செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய்யைச் சூடுபடுத்தி, அதில் நறுக்கிய காளானைப் போட்டு வறுத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள வெண்ணெய்யைப் போட்டுக் காய்ந்ததும் அதில் சோள மாவைப் போட்டு நன்றாகக் கிளறி கலந்து வைக்கவும்.
3. மாவுக் கலவையைச் சூடுபடுத்திய பின்பு, அதில் பாலைச் சேர்த்துப் பசை போல் ஆகும் வரை சூடுபடுத்தவும்.
4. வறுத்து வைத்திருக்கும் காளான்களைக் அந்தக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.