ஆட்டுக்கால் சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கால் - 4 எண்ணம்
2. வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 100 கிராம்
4. பூண்டு - 3 பல்
5. மிளகாய் - 4 எண்ணம்
6. மஞ்சள் தூள் - சிறிது
7. சோம்பு, பட்டை- தேவையான அளவு
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. மிளகுத்தூள் - தேவையான அளவு
11. கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1.ஆட்டுக்காலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும்.
2. அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் சேர்த்து வேகவிடவும்.
3. இதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. தாளிசத்தை கொதிக்க வைத்த ஆட்டுக்கால் சூப்பில் ஊற்றி மேலும் கொதிக்க விடவும். மல்லித்தழை போட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.