ஸ்வீட் கார்ன் சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஸ்வீட் கார்ன் - 1 கப்
2. சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
3. சோள மாவு - 2 தேக்கரண்டி
4. வினிகர் - 1 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து வேக வைக்கவும்.
2. பின்பு அதில் சோளமாவினைச் சிறிது நீரில் கரைத்துச் சிறிது, சிறிதாக ஊற்றிக் கலக்கி வேக வைக்கவும்.
3. கடைசியில் சோயா சாஸ், மிளகுத் தூள், வினிகர், உப்பு சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.