காலிஃப்ளவர் சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காலிஃப்ளவர் - 1 1/2 கப் (நறுக்கியது)
2. வெண்ணைய் - 25 கிராம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. காய்ச்சிய பால் - 1/2 கப்
5. காய்கறித்தாள் - 1 துண்டு
6. மிளகுத்தூள் - 1/4 கரண்டி
7. சோளமாவு - 1 1/2 மேசைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் வெங்காயத்தையும், பாதி காலிஃப்ளவரையும் அரிந்து சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு அலசி எடுத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணைய்யைச் சூடாக்கி, அதில் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
3. அதில் தண்ணீர் ஊற்றி கொதிவரும் வரை நெருப்பை அதிகமாக்கவும்.
4. அத்துடன் பால், உப்பு, சோளமாவு ஆகியவற்றைச் சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
5. கரைசலை நன்கு கலந்து விட்டு சூடாக்கவும்.
6. அதில் தேவையான அளவு மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.