வாழைத்தண்டு சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வாழைத்தண்டு - 1 எண்ணம்
2. வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 100 கிராம்
4. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
7. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
8. மல்லி - 1 மேசைக்கரண்டி
9. உப்பு - சிறிது
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. வாழைத்தண்டைத் துண்டுகளாக்கித் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
2. அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
3. மிளகாய் வற்றல், மல்லி, வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்க்கவும்.
4. தண்டு நன்கு வெந்ததும், கறிவேப்பிலை, நறுக்கிய மல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.