கேரட் சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கேரட் – 100 கிராம்
2. இஞ்சி – சிறிய துண்டு
3. பூண்டு – 5 பல்
4. வெண்ணெய் – 2 ஸ்பூன்
5. மிளகுத்தூள் - தேவையான அளவு
6. உப்பு – தேவையான அளவு
7. மல்லித்தழை - சிறிது
8. புதினா இலை – சிறிது.
செய்முறை:
1. மல்லித்தழை, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கேரட், இஞ்சி, பூண்டை துருவிக் கொள்ளவும்.
3. குக்கரில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் துருவிய கேரட், இஞ்சி போட்டு 2 விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
4. ஆறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, வேக வைத்த கேரட்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. கேரட் விழுதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.
6. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டுச் சூடானதும், அதில் துருவிய பூண்டைப் போட்டுத் தாளித்து, பின் அரைத்து வைத்திருக்கும் கேரட் கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்.
7. சூப் கொதித்து வந்ததும், அதன் மேலாகப் பொடியாக நறுக்கி வைத்துள்ள மிளகுத்தூள், மல்லித்தழை, புதினா போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.