முருங்கைக்காய் சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் - 4 எண்ணம்
2. பெரிய வெங்காயம் - 1எண்ணம்
3. பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
4. பூண்டு - 2 பல்
5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
6. தக்காளி - 25 கிராம்
7. கார்ன்ப்ளவர் - 1 தேக்கரண்டி
8. பால்பவுடர் - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவைக்கேற்ப
10. மிளகு, சீரகம் தூள் - தேவைக்கேற்ப
செய்முறை:
1.முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளிருக்கும் சதைப்பற்றை எடுக்கவும்.
2. பாசிப்பருப்பு, வெந்தயம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.
3. மிளகு, சீரகத்தை பருத்தித் துணியில் கட்டி அதில் போட்டு வைக்கவும்.
4. நன்றாக வேகவிட்டுப் பின் அதில் இருக்கும் துணி முடிப்பை எடுத்துவிட்டு அத்துடன் முருங்கைக்காய் சதைப்பற்றான விழுதைச் சேர்த்து அரைக்கவும்.
5.பின் அதை வடிகட்டி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சூப்பைச் சூடாக்க வேண்டும்.
6. கார்ன்பிளவர், பால்பவுடர் ஆகியவற்றை குளிர்ந்த நீர் கலந்து கரைத்துச் சூடான சூப்பில் ஊற்ற வேண்டும்.
7. நன்றாகக் கலந்து விட்டு சில நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். இதில் ரஸ்க் சேர்த்து சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.