பச்சை பயறு சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சை பயறு - 1/2 கப்
2. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. எண்ணெய் - 1 தேக்கரண்டி
5. பூண்டு (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
6. வெங்காயம் (நறுக்கியது) - 2 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சைப் பயறை ஆறு மணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவித் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
2. உருளைக்கிழங்கின் தோலைச் சீவி விட்டுப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு மூன்று கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.
4. குக்கர் ஆறியவுடன் திறந்து வெந்தப் பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும்.
5. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணைய்யைப் போட்டுச் சூடானதும் பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்துச் சிவக்க வதக்கவும்.
6. அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டுக் கொதிக்க விடவும்.
7. ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு: ஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ், கேரட் துண்டுகள் சேர்த்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.