கேரட் இஞ்சி சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 6 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. மல்லித்தழை - சிறிது
4. இஞ்சி - 1 துண்டு
5. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
6. சோள மாவு - 1 தேக்கரண்டி
7. பால் - 1 கப்
8. மிளகுத்தூள் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் வெண்ணையை ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம், இஞ்சி, கேரட் மற்றும் மல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும்.
2. சோளமாவினைத் தண்ணீருடன் கலந்து சேர்க்கவும்.
3. அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து கலக்கவும்.
4. இந்தக் கலவையை மூடியால் மூடி பத்து நிமிடங்கள் வரை சமைக்கவும்.
5. அதன் பின்னர், அதில் பாலைச் சேர்த்து நன்றாகக் கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிச் சூடாக பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.