பட்டாணி சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சைப் பட்டாணி - 150 கிராம்
2. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. இஞ்சி - சிறிதளவு
5. பூண்டு - 2 பல்
6. எலுமிச்சம்பழச் சாறு - 1 மேசைக் கரண்டி
7. மல்லித்தழை - சிறிதளவு
8. மிளகுத்தூள் - தேவையான அளவு
9. வெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. வாணலியில் வெண்ணெயைப் போட்டு, உருகியதும் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உருளைக்கிழங்கு, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணியைச் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் அதில் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
5. அனைத்தும் வெந்த பிறகு, அதன் தண்ணீரை வடிகட்டித் தனியே வைக்கவும்.
6. வேகவைத்த காய்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
7. அரைத்த விழுதைத் தனியேப் வடித்து வைத்திருக்கும் தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும்.
8. பின்னர் அதனை மீண்டும் வடிகட்டவும்.
9. வடிகட்டி வைத்திருக்கும் சாற்றுடன் மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
10. மீதமிருக்கும் பட்டாணியைத் தனியே உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
11. வேகவைத்து எடுத்த பட்டாணியைச் சூப்பில் மிதக்கவிட்டுப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.