ஆட்டுக்கால் சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கால் - 2 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 8 எண்ணம்
3. பூண்டு - 4 பல்
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. மல்லி - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - சிறிது
8. கறிவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், 8 டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.