வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நறுக்கிய காய்கறிகள் - 200 கிராம்
2. நூடுல்ஸ் - 200 கிராம்
3. வெங்காயம் – 1
4. பூண்டு – 1 பல்
5. மிளகுத்தூள் – தேவையான அளவு
6. வெங்காயத்தாள் – ஒன்று (நறுக்கியது)
7. கொத்தமல்லி தழை – சிறிதளவு
8. வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
9. சோள மாவு (கார்ன் பிளவர்) – 1 மேசைக்கரண்டி
10. சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்து, வேக வைத்த தண்ணீரை 4 கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. நூடுல்ஸ் வேக வைத்து அதிலிருந்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
3. கடாயில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் பூண்டை நறுக்கிப் போட்டு வதக்கவும்.
4. அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி, காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
5. அது நன்றாகக் கொதிக்கவும், அதில் உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் போன்றவற்றைச் சேர்க்கவும்.
6. இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். (விரும்பினால் அஜினோமோட்டோ சேர்த்துக் கொள்ளலாம்)
7. மல்லித் தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.