கறிவேப்பிலை சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை (காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது) - 15 துண்டுகள்
2. துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
3. உப்பு - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
5. சிறிய வெங்காயம் - 3 எண்ணம்
6. பூண்டு - 2 பல்
7. தக்காளி - 1 சிறியது
தாளிக்க:
8. வெண்ணெய் அல்லது நெய் - 1/2 தேக்கரண்டி
9. சோம்பு - 1/4 தேக்கரண்டி
10. மிளகு - 3 எண்ணம்
சுவைக்கு:
11. எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைத் தவிர்த்த அனைத்தையும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
2. அதன் பிறகு, அது ஆறியதும் மத்தால் நன்கு கடைந்து கொண்டு, பின்னர் வடிகட்டி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் வெண்ணை அல்லது நெய் ஊற்றிக் காய்ந்தது, அதில் தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைச் சேர்த்து தாளிதம் செய்யவும். (தேவையெனக் கருதினா,. சிறிது கரம் மசால் பொடி சேர்த்துக் கொள்ளலாம்)
4. பின்பு, அதில் வடிகட்டி வைத்திருக்கும் சூப் தண்ணீரைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. பின்னர் அதனை இறக்கி, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.