காளான் சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 250 கிராம்
2. பூண்டு - 5 பல்
3. பூண்டு - 2 எண்ணம்
4. இஞ்சி துண்டு - சிறிது
5. வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கோப்பை
6. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. சோள மாவு - 3 மேசைக்கரண்டி
9. எலுமிச்சை - 1/2 பழம்
10. வெண்ணை அல்லது நெய் - 1 மேசைக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு அடி கனமான பாத்திரத்தைச் சூடாக்கி வெண்ணையை ஊற்றிக் காய்ந்ததும், அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
2. பின்பு பொடியாக நறுக்கிய காளானைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3. பிறகு அதில் ஐந்து கோப்பை தண்ணீர் விட்டு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.
4. பின்பு, அதில் சோளமாவை கால் கோப்பை நீரில் கரைத்து ஊற்றவும்.
5. இப்போது சூப் சிறிது கெட்டியாக இருக்கும். மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
6. எலுமிச்சைப் பழச்சாறு சிறிது சூப்பில் சேர்க்கவும்.
7. பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, காளான் சூப்பைப் பரிமாறலாம்.
குறிப்பு:
காரம் சேர்க்க விரும்புபவர்கள் மேலும் மிளகுப் பொடி தூவிக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.