முருங்கைக் கீரை சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக் கீரை - 1 கட்டு
2. சிறிய வெங்காயம் - 5 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. சீரகம் - 1 கரண்டி
5. மிளகுத்தூள் - 1/2 கரண்டி
6. பூண்டு - 5 பற்கள்
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முருங்கைக் கீரையை நன்றாக அலசி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம் சேர்த்து வதக்கவும்.
3. சீரகம் வதங்கியதும், அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதக்கியதும் முருங்கைக் கீரையினைச் சேர்த்து வதக்கவும்.
6. தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.