காலிபிளவர் சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் - 1 கோப்பை
2. காலிபிளவர் தண்டு - 1 கோப்பை
3. மிளகுத்தூள் - 1/2 கரண்டி
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. பூண்டு - 1 எண்ணம்
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
8. பால் - 1 கோப்பை
செய்முறை:
1. காலிபிளவர் பூ மற்றும் தண்டை மிதமான வெந்நீரில் போட்டு, சில நிமிடங்கள் கழித்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
2. மிக்ஸியில் காலிபிளவர் தண்டு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அரைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காலிபிளவர் பூவை வதக்கவும்.
4. வதங்கியவுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி விட்டுத் தனியாக வைக்கவும்.
5. ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் அரைத்தத் தண்டுக் கலவையைச் சேர்க்க வேண்டும்.
6. ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு சூடு படுத்தவும்.
7. அதில் பால் மற்றும் காலிபிளவர் பூவைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.