ஆட்டுக்கால் சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கால் - 4 எண்ணம்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. இஞ்சி - சிறிது
4. பூண்டு - 4 பற்கள்
5. தக்காளி - 2 எண்ணம்
6. மிளகு - 1 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
8. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
11. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
12. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
13. உப்புத் தூள் - 2 தேக்கரண்டி
14. சோம்பு - 1 தேக்கரண்டி
15 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிது
செய்முறை:
1. ஆட்டுக்காலை ஒவ்வொன்றாக அடுப்பில் வாட்டி வைத்துக் கொள்ளவும்
2. சூடு ஆறுவதற்கு முன்பாகக் கத்தியை கொண்டு மேல்பாகத்தைச் சுரண்டி எடுத்துக் கழுவிக் கொள்ளவும்
3. பின்னர் அதை வேண்டியவாறு துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும்
4. இதனுடன் நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகு, நறுக்கிய பாதி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மல்லித்தழை மற்றும் மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்புத்தூளைப் போட்டு இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்
5. நன்கு வெந்து குழம்பானவுடன் சட்டியில் எண்ணெய்யைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டுப் பிறகு மிளகாய் வற்றல், மீதமுள்ள வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
6. இதைச் சூப்பில் ஊற்றி நன்கு கலந்து மூடி போட்டு அடுப்பின் வெப்பத்தைக் குறைத்து விடவும்
7. அரைமணி நேரம் கழித்து நன்கு கலக்கிவிட்டு இறக்கி விடவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.