காளான் கேரட் சூப்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. காளான் - 1 பாக்கெட்
2. கேரட் - 3 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
4. வெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
5. கார்ன் பிளவர் - 2 மேசைக்கரண்டி
6. மிளகுத்தூள் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு
8. பூண்டு - 6 பற்கள்
9. பால் - 1/2 கோப்பை
செய்முறை:
1. காளானில் கால் பகுதியைச் சிறிதாக வெட்டிக் கொள்ளவும். மீதமுள்ள காளான் பெரிய அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. கேரட்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. பெரிய வெங்காயத்தைப் பெரியதாகவும், பூண்டைச் சிறியதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி வெண்ணெய் போட்டுக் காய்ந்ததும், அதில் சிறிதாக நறுக்கிய காளான், பொடியாக நறுக்கிய கேரட்டைச் சேர்ந்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
5. அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இலேசாக வதக்கிக் கொள்ளவும்.
6. வதக்கியவற்றை ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளவும.
7. அதேப் பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து, அதில் பெரிதாக நறுக்கிய காளான், பெரிதாக நறுக்கிய வெங்காயம், சிறிதாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
9. அதில் 600 மில்லி வரை தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
10. காளான், வெங்காயம், பூண்டு வெந்ததும், அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
11. வடிகட்டிய காளானை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் கார்ன்பிளவர், அரை கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
12. அரைத்த விழுதை காளான் வடிகட்டிய தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
13. அதனுடன் முதலில் வதக்கி வைத்த காளான்,கேரட்டைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
14. பிறகு, அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறலாம்.
15. இப்போது நமக்கு சுவையான சத்தான காளான் கேரட் சூப் ரெடி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.