முள்ளங்கி தக்காளி சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை முள்ளங்கி - 1 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. சோள மாவு - 1/2 மேசைக்கரண்டி
4. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
5. நெய் - 2 தேக்கரண்டி
6. மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முள்ளங்கி, தக்காளியை நறுக்கி வைக்கவும்.
2. சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய முள்ளங்கி, தக்காளி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வேக விடவும்.
3. வேகவைத்தத் தண்ணீரைத் தனியாக எடுத்து வைக்கவும்.
4. வெந்த காய்கறியை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து, அதில் வேக வைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
5. சோள மாவைத் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும்.
6. மிளகுத்தூள் சிறிது போடவும். சிறிது நெய் சேர்த்து விடவும்.
7. அதனுடன் மல்லித்தழை சேர்த்துச் சுடசுடப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.