கீரைத் தண்டு சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கீரைத் தண்டு - 150 கிராம்
2. மிளகு - 1 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. மல்லி விதை - 2 தேக்கரண்டி
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. தக்காளி - 1 எண்ணம்
7. பட்டை - 1 துண்டு
8. இஞ்சி - 1 துண்டு (1/2 அங்குல அளவு)
9. சின்ன வெங்காயம் - 12 எண்ணம்
10. பூண்டு - 5 பற்கள்
11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
12. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
13. உப்பு - தேவையானஅளவு
14. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. கீரைத் தண்டைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி விதை, வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து கொரொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
5. அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. அவை வதங்கியதும், கீரைத் தண்டு சேர்த்துக் கலந்து விட்டு, 800 மி.லி தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்.
7. அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கி விடவும்.
8. பின் பாத்திரத்தை மூடி போட்டு வேக விடவும்.
9. வேக வைத்த பின்பு, அதனைச் சிறு துளையிட்ட வடிகட்டியில் மீண்டும் வடிகட்டிக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.