தக்காளி காரட் சூப்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. பழுத்த தக்காளி - 2 எண்ணம்
2. காரட் 1 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. பூண்டு - 3 பற்கள்
5. இஞ்சி - 1 துண்டு
6. மிளகு - 1 தேக்கரண்டி
7. சீரகம் - 1 தேக்கரண்டி
8. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
9. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. சர்க்கரை - 1 தேக்கரண்டி
12. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து, அதில் சீரகம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
2. அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அத்துடன் கேரட் சேர்த்து வதக்கவும்.
3. அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும்.
4. அதன் பின்பு, அதனை ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை வடிகட்டியில் வடித்து எடுத்து. அதனை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.
6. ஒரு கொதி வந்ததும் சர்க்கரையைச் சேர்த்து இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.