முருங்கைக்காய் சூப்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் - 1 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. பூண்டு - 8 பல்
4. தக்காளி - 1 எண்ணம்
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. மிளகு - 10 எண்ணம்
8. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
9. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. முருங்கைக்காயை நறுக்கி குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
2. வெந்தவுடன் ஒரு ஸ்பூன் வைத்து முருங்கைக்காயில் உள்ள சதைப்பகுதியை வழித்து எடுத்து வைக்கவும்.
3. அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு மசித்து வைக்கவும்.
4. பூண்டை நன்கு தட்டி வைத்து, சின்ன வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
5. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, அதில் சீரகம், மிளகு சேர்த்துத் தாளித்து விடவும்.
6. அதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
7. அதனுடன் முருங்கைக்காய் வேக வைத்த தண்ணீர் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.
8. மசித்து வைத்த முருங்கைக்காய் சதைப்பகுதி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
9. பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி வைத்து, தேவையான அளவு சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.