ஆட்டுக்கறி சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. எலும்புடன் கூடிய ஆட்டுக் கறி – 1/2 கிலோ
2. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
3. மிளகாய்த் தூள் – 1/4 தேக்கரண்டி
4. சீரகத் தூள் – 3/4 தேக்கரண்டி
5. மிளகுத் தூள் – 3/4 தேக்கரண்டி
6. வெங்காயம் – 1 எண்ணம்
7. தக்காளி – 1 எண்ணம்
8. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
9. இஞ்சிப் பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
10. நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
11. மல்லித்தழை – சிறிது
12. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஆட்டுக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் மல்லித்தழை போன்றவைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வறுக்கவும்.
4. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்கள் வதக்கவும்.
5. அத்துடன் மிளகாய், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.
6. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் மட்டன் துண்டுகளைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
7. தேவையான தண்ணீர் ஊற்றி அதில் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.
8. பாத்திரத்தை மூடி வைத்துச் சுமார் 20 நிமிடங்கள் வேக விடவும்.
9. வேக வைத்த சூப்பை இறக்கி வைத்து அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலாகத் தூவி விடவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.