இஞ்சிப் பால்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பால் – 1 கப்
2. இஞ்சி – சிறிய துண்டு
3. தேன் – 1 கரண்டி
செய்முறை:
1. இஞ்சியின் தோலை நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும்.
2. நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
3. தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டிச் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
4. ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிகட்டிய இஞ்சிச்சாறைக் கலந்து கொள்ளவும்.
5. அத்துடன் தேன் சேர்த்துப் பருகலாம்.
குறிப்பு:இந்த இஞ்சிப் பாலைக் காலையில வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சளித்தொல்லை நீங்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.