தீபாவளி மருந்து (லேகியம்)
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சுக்கு - 50 கிராம்
2. சித்தரத்தை - 50 கிராம்
3. கண்டதிப்பலி - 25 கிராம்
4. அரிசி திப்பிலி - 5 கிராம்
5. ஓமம் - 100 கிராம்
6. மல்லி விதை - 50 கிராம்
7. மிளகு - 50 கிராம்
8. கிராம்பு - 20 கிராம்
9. ஜாதி பத்திரி - 10 கிராம்
10. விரலி மஞ்சள் - 10 கிராம்
11. வெல்லம் - 250 கிராம்
12. நெய் - 200 கிராம்
13. தேன் - 100 கிராம்
செய்முறை:
1. சித்தரத்தை மற்றும் சுக்கைத் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
2. வெல்லம், நெய் , தேன் தவிர மற்ற பொருட்களைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
3. வறுத்த பொருட்களை ஊறவைத்து அம்மி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளலாம்.
4. அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை நீர் சேர்த்து மிதமான தீயில் கரைய விடவும்.
5. வெல்லப் பாகை வடிகட்டிக் கொள்ளவும் .
6. வெல்லப் பாகைத் திரும்பவும் அடுப்பில் ஏற்றி மருந்துப்பொடி, நெய், தேன் சேர்த்துப் பத்து நிமிடம் வரைக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: உலர்த்த திராட்சை, சிறு துண்டுகளாக நறுக்கிய பேரீச்சம் பழம் சேர்த்து கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.