கேரள பாகற்காய் அச்சார்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாகற்காய் - 200 கிராம்
2. வெங்காயம் - 50 கிராம்
3. மிளகாய் - 15 கிராம்
4. மல்லித்தூள் - 10 கிராம்
5. மிளகுப்பொடி - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு
7. தேங்காய் - சிறியது
8. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1.பாகற்காயை சரியான அளவுகளில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் சேர்த்து பாகற்காயை அதில் நன்கு வேக வைக்கவும்.
3. நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை கலந்து வாணலியில் வதக்கி எடுக்கவும்.
4. தேவைக்கேற்ப மல்லித்தூள், மிளகுப்பொடி, உப்பு, துருவிய தேங்காய் கலக்கவும்.
5. இவையனைத்தையும் அந்த பாகற்காயுடன் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.