கோதுமை அல்வா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சம்பா கோதுமை- 250 கிராம்
சீனி-750 கிராம்
நெய்-250 கிராம்
முந்திரிப் பருப்பு-50 கிராம்
ஏலக்காய்- 4
எலுமிச்சம்பழம்- சிறியதில் பாதி அளவு
செய்முறை:
1.சம்பா கோதுமையை முதல் நாள் இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் மூன்று முறை ஆட்டிப் பிழிந்து பால் எடுக்க வேண்டும்.
2. இந்தக் கோதுமைப் பாலும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் அளவு இருக்கும்படி எடுத்துக் கொள்ளவும்.
3. மாலையில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இந்த கோதுமைப் பால் தண்ணீர் கலந்த கலவையை ஊற்றி சீனியும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
4. அடிப்பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அப்படி ஒட்டினால் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
5. அல்வா பதத்துக்கு வந்து விட்டால் எலுமிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி, நெய்யில் வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு சேர்த்துக் கிளறவும்.
6. சரியான பக்குவத்துக்கு வந்த பின்பு நெய் தடவிய தட்டில் ஊற்றி வைத்து விடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.