பீட்ரூட் கோளா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் - 250 கிராம்
2. கடலைப்பருப்பு - 150 கிராம்
3. பல்லாரி வெங்காயம் - 1 எண்ணம்
4. மிளகாய் - 2 எண்ணம்
5. கிராம்பு - 4 எண்ணம்
6. பட்டை - 1 துண்டு
7. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
8. இஞ்சி - சிறிது
9. பூண்டு - 3 பற்கள்
10. கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1.கடலைப்பருப்பை தண்ணீரில் குறைந்தது 3 மணி நேரம் ஊற வைத்துத் தண்ணீரின்றி வடிகட்டி சுத்தம் செய்யவும்.
2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, மல்லித்தழை, உப்பு போன்றவற்றுடன் துருவிய பீட்ரூட் சீவலைச் சேர்த்துத் தண்ணீரில் சிறிது நேரம் வேகவைத்து வற்றல்தூள், தூள் செய்த கரம் மசால் கலந்து தண்ணீரில்லாமல் சுருளக் கிளறி ஆற வைக்கவும்.
3. மிக்ஸியில் ஊறவைத்த பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.
4. இத்துடன் பீட்ரூட் கலவையைக் கலந்து சோடா உப்பு சிறிது சேர்த்து உருண்டையாக உருட்டி எண்ணெய்யில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.