மாம்பழ லட்டு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழக்கூழ் - 1/2 கப்
2. சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்
3. தேங்காய்ப் பவுடர் - 1 கப்
4. ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
செய்முறை:
1. அடி கனமாக உள்ள பாத்திரத்தில் தேங்காய்ப் பவுடரைப் போட்டுப் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
2. அத்துடன் மாம்பழக் கூழைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. அந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து, அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கலக்கவும்.
4. கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி ஆறவிடவும்.
5. அந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
6. ஒரு தட்டில் சிறிது தேங்காய்ப் பவுடரைத் தூவி, அதில் உருண்டைகளைப் போட்டு வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.