கோதுமை ரவை அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை ரவை – 1/2 கப்
2. சர்க்கரை – 1/2 கப்
3. நெய் – 4 தேகரண்டி
4. முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்
5. பாதாம் பருப்பு – 10 எண்ணம்
6. பால் – 2 கப்
7. ஏலக்காய்த் தூள் – சிறிது.
செய்முறை:
1. குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
2. ஒரு கடாயில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முந்திரி, பாதாம் பருப்புகளைச் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவைக் கலவையைப் போட்டு கிளறவும்.
3. அதில் சர்க்கரையைக் கலந்து நன்றாகக் கிளறவும்.
4. பிறகு, அதில் மீண்டும் நெய் ஊற்றிக் கிளறவும்.
5. ஒரு தட்டில் நெய் தடவி, அதில் அந்த கலவையை ஊற்றிப் பாதாம் பருப்பைச் சிறிதாக்கி மேலே தூவிவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.