சோயா 65
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சோயா உருண்டைகள் - 100 கிராம்
2. தயிர் - 30 கிராம்
3. தந்தூரி மசாலா - 15 கிராம்
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. குடமிளகாய் - 1 எண்ணம்
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சோயா உருண்டைகளை ஐந்து நிமிடங்களுக்கு வெந்நீரில் போட்டு வைக்கவும்.
2. பிறகு அதைப் பிழிந்து எடுத்து, தயிர், மசாலா, உப்பு ஆகியவற்றில் பாதியளவு சேர்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3. மீதி மசாலாவில் பெரிதாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து ஊற வைக்கவும்.
4. அரை மணி நேரம் கழித்து 2 தேக்கரண்டி எண்ணெய் சூடுபடுத்தி, சிறு நெருப்பில் வெங்காயம், குடமிளகாய் வதக்கி, அத்துடன் ஊறிய சோயா உருண்டைகளையும் சேர்த்துப் பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.