தேங்காய் திரட்டுப்பால்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் - 2 எண்ணம்
2. வெல்லம் - 1/2 கிலோ
3. பால் - 400 மி.லி.
4. ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
5. உடைத்த முந்திரிப் பருப்பு - 5 தேக்கரண்டி
6. நெய் - தேவையான அளவு
7. வறுத்த பாசிப்பருப்பு - 6 தேக்கரண்டி
செய்முறை:
1. தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. வெல்லத்தைத் துருவிக் கொள்ளவும்.
3. பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
4. மிக்சியில் வறுத்த பாசிப்பருப்பு, துருவிய தேங்காயைச் சேர்த்துக் கெட்டியாக நைசாக அரைக்கவும்.
5. அடி கனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.
6. இப்பொழுது வெந்து தேங்காய் நிறம் மாறி வரும் பொழுது, துருவிய வெல்லத்தைச் சேர்த்து, இடையிடையே நெய் சேர்க்கவும்.
7. அனைத்தும் சேர்ந்து கைகளால் உருட்டும் பதம் வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
8. நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறலாம்.
குறிப்பு: தேங்காய்த் திரட்டுப்பால் ஒரு வாரம் வரை கெடாது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.