மெது பக்கோடா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 500 கிராம்
2. அரிசி மாவு - 200 கிராம்
3. வெங்காயம் - 200 கிராம்
4. பச்சை மிளகாய் - 10 எண்ணம்
5. கறிவேப்பிலை - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. சமையல் சோடா - சிறிது
8. நெய் - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய், ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
3. அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போடவும்.
4. அதனுடன் உப்பு, சிறிது சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
5. பிறகு மாவை அதில் சேர்த்துத் தண்ணீர் விட்டுத் தளரப் பிசைந்து கொள்ள வேண்டும்.
6. வாணலியில் போதுமான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வெந்ததும் எடுத்து விட வேண்டும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.