அதிரசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கிலோ
2. வெல்லம் - 750 கிராம்
3. ஏலக்காய்த்தூள் - 5 கிராம்
4. நெய் - 20 மி.லி
5. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும்.
2. உலர்த்திய அரிசியை அரைத்து மாவை சலித்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு போல் காய்ச்சவும்.
4. வெல்லப்பாகு கம்பிப் பாகு போல் வரும் போது மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
5. கையில் நெய் தடவி மாவைத் தொட்டால் மாவில் கையில் ஒட்டாமலிருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
6. மாவின் மீது நெய் தடவி ஆறியபின்பு மூடி வைத்து விடவும்.
7. இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.
8. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தட்டிய அதிரசங்களைப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.