கோதுமை மாவு போண்டா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 1 கப்
2. வெல்லம் - 1/2 கப்
3. வாழைப்பழம் - 1 எண்ணம்
4. ஏலக்காய் - 2 எண்ணம்
5. ரவை - 3 தேக்கரண்டி
6. பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வாழைப்பழம் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் வெல்லம், ஏலக்காய் போட்டு அரைத்து எடுக்கவும்.
2. அரைத்த வாழைப்பழ விழுதுடன் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்து கொள்ளவும்.
3. மாவு கையில் எடுக்கும் பதத்தில் கரைக்கவும்.
4. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் மாவை எடுத்துப் போண்டா போல் போட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.