கிரீம் கேக்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டைகள்- 3 எண்ணம்
2. துவர்ப்பான கிரீம் 1 கிண்ணம்
3. சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
4. மைதா மாவு - 1 கிண்ணம்
5. பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
6. சர்க்கரை - 1/4 கிண்ணம்
7. உறைய வைக்கப்பட்ட வெண்ணெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
1.முட்டையின்வெள்ளைக்கருவை எடுத்து நுரை வரும்வரை நன்கு அடித்துக் கலக்கவும். அதில் சர்க்கரையும், துவர்ப்புக் கிரீமையும் சேர்த்துக் கலக்கவும்.
2. சாதாரணமாக கேக் செய்யும் முறையைப் போலவே பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை முட்டையுடன் சேர்த்துக் கலக்கவும்.
கேக் தயாரிக்க:
1.மைதா மாவு 1/2 கிண்ணம், சர்க்கரை 1/4 கிண்ணம், உறைய வைக்கப்பட்ட பட்டரை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
2. கேக் தயாரிக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் மெதுவாக தடவவும். ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் மாவுக் கலவையை 20 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அதைக் குளிரூட்டி வெட்டவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.