சௌசௌ அல்வா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சௌசௌ (துருவியது) - 1 கப்
2. சர்க்கரை - 1/2 கப்
3. பால் - 1/4 கப்
4. நெய் - 1 மேசைக்கரண்டி
5. உணவு நிறப்பொடி (food colour) - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. சௌசௌ காயைத் தோலுரித்துத் துருவிய விழுது ஒரு கப் வரி எடுத்து வைக்கவும்.
2. சௌசௌ விழுதினை ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலோடு சேர்த்து நன்கு கிளறவும்.
3. சௌசௌ வெந்தவுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
4. விழுதும், சர்க்கரையும் நன்றாகச் சேர்ந்த பின் நெய் விட்டுக் கலந்து உணவு நிறப்பொடியை ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சேர்த்து, சிறிது நேரம் கழித்து இறக்கி ஆறவைத்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.