சோர்மா லட்டு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 1 கப்
2. சர்க்கரை - 150 கிராம்
3. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
4. பால் - 1/4 கப்
5. நெய் - 4 தேக்கரண்டி
6. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
7. கோவா (சர்க்கரை நீக்கியது) - 100 கிராம்
8. முந்திரி, பாதாம், கிராம்பு - தேவைக்கேற்ப
9. உப்பு - சிறிதளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைக் கொட்டி, சிறு தீயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
2. வறுத்த கோதுமை மாவுடன் சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த் தூள் மற்றும் கொதித்த பால், சிறிதளவு தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவைப்போல் தயார் செய்துகொள்ளவும்.
3. பின்னர் சப்பாத்தி போல் உருட்டி நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்து, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுப் பொறிக்கவும்.
4. பொறித்ததை அரைத்து மாவாக்கி, அதை உருளை வடிவத்தில் செய்து அதனுள் கோவா, நெய் மற்றும் பொடியாக நறுக்கிவைத்துள்ள பாதாம், முந்திரி, சிறிதளவு சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து பிடிமானத்துக்காக ரெண்டு கிராம்பு வைக்கவும்.
5. பின்னர் அதனை மைக்ரோ ஓவனில் வைத்து ஒரு நிமிடம் கழித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.