வேர்க்கடலை லட்டு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வறுத்த வேர்க்கடலை - 1 கப்
2. ஏலக்காய் தூள் - சிறிதளவு
3. வெல்லத்தூள் - 3/4 கப்
செய்முறை:
1. வறுத்த வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். பின்னர், வறுத்த கடலையைக் கைகளால் கசக்கி ஊதினால் மேல் தோலினை உதிர்க்கவும்.
2. தோல் நீக்கியக் கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும் (விழுதாக விரும்புபவர்கள், அதைப்போல் அரைத்துக் கொள்ளலாம்)
3. அரைத்த வேர்கடலையுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டும் சேர்ந்து திரண்டு வரும் வரை மிக்ஸியை மெதுவான வேகத்தில் வைத்து அரைக்கவும்.
4. அரைத்த கலவையை ஒரு தட்டில் போட்டு சிறு சிறு உருண்டைகளாய் பிடித்து வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.