தேங்காய் பர்பி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த்துருவல் - 2 கப்
2. சர்க்கரை - 2 கப்
3. பால் - 1/4 கப்
4. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. வெறும் வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு, நிறம் மாறாமல், 2 அல்லது 3 வினாடிகள் வதக்கி எடுக்கவும்.
2. சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
3. கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது பாலை ஊற்றவும். சர்க்கரையிலுள்ள அழுக்கெல்லாம் நுரைத்து வரும்.
4. அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டியில் ஊற்றி, நன்றாக வடிகட்டிக் கொள்ளவும்.
5. வடிகட்டிய சர்க்கரை பாகை அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
6. கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறவும்.
7. அடுப்பை மிதமான தீயில் வைத்து, தேங்காய்த்துருவல், சர்க்கரை எல்லாம் நன்றாகக் கலந்து கெட்டியாகும் வரை, அடிக்கடிக் கிளறி விடவும்.
8. சற்று கெட்டியானதும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, ஆறியதும் வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.