இனிப்பு பூரி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 2 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. தேங்காய்த் துருவல் - 1 கப்
4. ஏலக்காய் தூள் - சிறிது
5. கிராம்பு - சிறிது
6. அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி
7. நெய் - 1/2 கப்
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கி வைத்துக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
3. பின்பு அதனுடன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்துக்கு வரும்வரை மாவைப் பிசைந்து ஊற வைக்கவும்.
4. வாணலியில் சர்க்கரையைச் சேர்த்துப் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
5. அதில் ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
6. மாவு கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போன்று தயார் செய்து கொள்ளவும்.
7. அதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
8. பின்னர் அந்தப் பூரிகளைச் சர்க்கரைப் பாகில் நனைத்துப் பரிமாறலாம்.
குறிப்பு:சிறு குழந்தைகள் இனிப்பு பூரியை விரும்பிச் சாப்பிடுவர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.